மோரில் வெந்தய பொடியை சேர்த்து குடிச்சா உடலில் நடக்கும் அதிசயம்

 
Buttermilk

ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் .இதில் 60 சதவீத பெண்கள் தங்கள் வாழ்நாளில் பலமுறை இந்த சிறுநீரக பாதை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பர் .இந்த நோயால் அடிக்கடி சிறுநீர் வருவது ,யூரின் போகும்போது எரிச்சல் ,வயிற்று வலி போன்ற தொல்லைகள் உண்டாகி நரக வேதனை அனுபவிப்பர் .இந்த தொற்றுக்கு ஆங்கில மருத்துவத்தில் ஆண்களுக்கு நீண்ட நாள் மருந்து சாப்பிட வேண்டும் .ஆனால் பெண்கள் ஐந்து நாள் சாப்பிட்டால் போதும் .ஆனால் இதற்கு சில வீட்டு வைத்தியங்கள் ஆரம்ப நிலையில் உதவும் .நிறைய தண்ணீர் குடித்தால் அந்த தண்ணீர் யூரினாக போகும்போது பாக்டீரியாக்கள் அடித்து கொண்டு போய் விடும் .மேலும் சில சிட்ரஸ் பழங்கள் லெமன் ,ஆரஞ்சு ,சாத்துக்குடி போன்றவை இந்த தொல்லையினை அகற்ற உதவும் .மேலும் சில இயற்க்கை வழிகளை பார்க்கலாம்

urin

1.யூரின் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிளாஸ் மோரில் அரை ஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து தொடர்ச்சியான குடித்து வந்தால் சிறுநீர் தொற்று மிக வேகமாக சரியாக ஆரம்பித்து நம் ஆரோக்கியம் சிறக்கும்

2.மேலும் யூரின் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் இளநீரில் சீரகத்தை கலந்து குடித்தாலும் சிறுநீர்ப் பாதை தொற்று சரியாகும்.

3.யூரின் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு கலந்து தினமும் இரவில் குடித்து வர சிறுநீர்ப் பாதை தொற்று சரியாகும்