தினமும் மதிய நேரத்தில் மோர் குடிச்சா என்னாகும் தெரியுமா ?

 
buttermilk

தயிரிலிருந்து கிடைக்கும் மோரில் பல வகையான நன்மைகள் உள்ளன. மோரில் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை போட்டு குடித்தால் இன்னும் பல ஆரோக்கியம் கிடைக்கும் .இப்படிப்பட்ட மோர் சாப்பிடுவதன் பயன்கள் பற்றி நாம் தெளிவாக பார்ப்போம்.

Buttermilk

மோரின் பயன்கள்:

தினமும் மதிய நேரத்தில் மோர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் நம் உடலில் ஏற்பட்ட உடல் சூடு தனிந்து உடல் ஊட்டியில் இருப்பது போல எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

உடலில் கண்டதை சாப்பிட்டு உண்டான வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணக் கோளாரு போன்றவற்றிற்கு மோர் குடிப்பது மிகவும் நல்லது.அதனால் அந்த நேரத்தில் மோர் குடியுங்கள்

சிலருக்கு அதிக உஷ்னம் காரணமாக உடல் சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு அவஸ்த்தை படுவார்கள் .அந்த நேரத்தில் உடல் உஷ்ணத்தையும் அந்த எரிச்சலையும் குணப்படுத்த  மோர் குடிப்பது நல்லது.

வீட்டிலேயே சுகாதாரமான  மோர் எப்படி தயாரிக்கலாம்

மத்து கொண்டு ஒரு சட்டியிலோ அல்லது பாத்திரத்திலோ தயிரைக் கடைந்து வெண்ணெய்யை எடுத்து விட்டு மீதமுள்ள தயிரில் சரி பங்கு தண்ணீரை சேர்த்து அதனை நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் சுத்தமான மோர் கிடைக்கும்.இதனை கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்தும் நாம் குடிக்கலாம் அல்லது சோற்றில் போட்டும்  தாளிக்காமலும் சாப்பிடலாம்.

மோரை விட தயிரில் குறைவான அளவே நன்மைகள் உள்ளன. தயிர் சாப்பிடுவதனால் உடல் சூடு அதிகரிக்கும்,மலச்சிக்கல் ஏற்படும் மற்றும் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். எனவே, தயிர் சாப்பிடுவதை விட மோர் சாப்பிடுவது நல்லது.அதனால் கோடை மற்றும் உஷ்ணமான நேரங்களில் மோர் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்