முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்க இதை செய்யுங்க போதும்
பொதுவாக இயற்கையான முறையில் சருமத்தை ப்ளீச்சிங் செய்வதால், நம் முகத்தில் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.இந்த பதிவில் இயற்கை முறையில் எப்படி ப்ளீச்சிங் செய்வது என்பது பற்றி நாம் காணலாம்
1.நம் முகத்தில் பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும்.
2.நம் முக சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கி நாம் ஆரோக்கியமும் அழகும் பெறலாம் .
3.நம் முகத்தில் பிளீச்சிங் செய்ய 1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
4.நம் முகத்தில் இயற்க்கையாக பிளீச்சிங் செய்ய1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
5.நம் முகத்தில் இயற்க்கையாக பிளீச்சிங் செய்ய2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
6.நம் முகத்தில் இயற்க்கையாக பிளீச்சிங் செய்ய ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் எடுத்து கொள்வோம்
7.அவற்றை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து விடவும் ,
8.பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
9.இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.

