மூளை பக்கவாதம் தாக்காமலிருக்க இந்த அறிகுறிகளை அலட்சிய படுத்தாதிங்க...

 
brain

 

உலகில் ஒவ்வொரு ஆறு நொடிக்கும் யாரோ ஒருவர் பக்க வாதத்தில் இறந்து கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிறது ,உலகில் காசநோய் ,கேன்சர் ,கொரானாவைவிட அதிக நபர்களை தாக்கும் இந்த நோய் கிட்டத்தட்ட மாரடைப்பின் அறிகுறிகளை கொண்டிருக்கும் .அதனால் ஒருவருக்கு பேச்சில் தடுமாற்றம் ,நடப்பதில் சிரமம் போன்ற சில அறிகுறிகளை 60 வயதுக்கு மேற்பட்டோர் கொண்டிருந்தால் மூளை நரம்புகள் சேத மடைவதற்குள் சிகிச்சை செய்வது அவசியம்

brain

மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் மூளை சரியாக இயங்க முடியாது,இதுதான் மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.

மூளை பக்கவாதத்தின் சில அறிகுறிகள்

ஒரு ஆரோக்கியமான நபரை  பக்கவாதம் தாக்கியவுடன் ,அதன் காரணமாக வாய் அல்லது கண்கள் அடிக்கடி இழுத்துக் கொள்வது போல் அறிகுறிகளை கொடுக்கும் .

சில நேரங்களில் இந்த பக்கவாத நோயாளிகளுக்கு மார்பில் கடுமையான வலி ஏற்படும்

ஒருவருக்கு பக்கவாத தாக்குதலின்  போது நாக்கில் உள்ள தசைகள் செயலிழந்து விடும் அதனால் நோயாளி முயற்சி செய்தாலும் அவரால் தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறுவார்

 பக்கவாத நேரத்தில் உடலில் ஆற்றல் என்பது முற்றிலும் இருக்காது சில சமயம் உடல் முழுவதும் மரத்து போன்ற உணர்வு ஏற்பட்டு .,உடல் முழுவதும் பாதிக்கப்படும்

மூளை பக்கவாதம் ஏற்பட்ட ஒருவருக்கு கண்களின் பார்வை திறனை கடுமையாக பாதிக்கிறது.

மூளையில் இருந்து தகவல்களை சுமந்து செல்லும் நரம்புகள் சேதம் அடைவதால் சில நேரங்களில் வெளிச்சம் அதிகமாகவும் சில சமயங்களில் மங்கலாகவும் தோன்றும்.