முந்திரி ,பாதாம் ,வால்நட் சேர்த்து கொள்வதால் எந்த உறுப்பு பலப்படும் தெரியுமா ?
பொதுவாக நமது மூளை வளர்ச்சிக்கு முட்டை ,மஞ்சள் மற்றும் முந்திரி ,பாதாம் ,வால்நட் போன்றவை பெரிதும் உதவுகின்றன .இந்த பொருட்களை சேர்த்து கொள்வதால் நம் மூளைக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முந்திரியில் , போலட், போலிக் அமிலம், மெலட்டோனின், கோலின், ஒமேகா3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
2.இந்த ஊட்டச்சத்துக்கள் மூளையினது வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களது பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகின்றன.
3. முந்திரியை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுதல் நன்று.
4.முந்திரி ,பாதாம் ,வால்நட் மன அழுத்தத்தைக் குறைக்க கூடியவை.
5.அடுத்து மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் பதார்த்தம் மறதியை குணப்படுத்த கூடியது.
6.அதனால் தினமும் சிறிய அளவு மஞ்சளை உணவில் சேர்த்து கொள்ளுதல் நன்று.
7.மஞ்சளில் மனதை சீர்ப்படுத்தும் தன்மையை கூட்டும் சக்தி உள்ளது
8.மேலும் மஞ்சள் மூளையின் வளர்ச்சி ஹோர்மோனினது செயற்பாட்டை அதிகரிக்கும்.
9.ஆனால் மஞ்சளை அளவுக்கு மீறி உண்டால் பித்தப்பை பிரச்சனைகள் உருவாகும்.
10.அடுத்து முட்டையில் புரதம் போன்றன அதிகளவில் காணப்படுவதால் மூளையின் அறிவாற்றல் அதிகரிக்கும்.
11.மேலும் முட்டை ஞாபக மறதி போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.
12.வால்நட், பாதாம் போன்றவற்றில் விற்றமின் A, மக்னீசியம், செலினியம், போன்ற மூளையை பலப்படுத்தும் விட்டமின் உள்ளது

