குழந்தைகளின் அறிவை மழுங்கடிக்கும் உணவுகள் எவை தெரியுமா ?

 
child

அந்த காலத்தில் ஸ்கூல் வாசலில் நெல்லிக்காய் ,கமர்கட்டு ,வேர்க்கடலை பர்பி போன்ற சத்தான உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் ஸ்கூல் பிள்ளைகள் அவற்றை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாகவும் ,அறிவுடனும் திகழ்ந்தார்கல்.ஆனால் தற்போது இருக்கும் சிறுவர் சிறுமியர் ஜங்க் புட் களான 

பீட்ஸா, பர்கர், லேஸ், ஃப்ரைடு அயிட்டம்ஸ், க்ரீம் கேக், ஐஸ்க்ரீம் போன்ற உணவுகளை சாப்பிட்டும்  ,பன்னாட்டு குளிர் பானங்களையும் குடித்தும் உடல் குண்டாகி ஆரோக்கியமற்றும் ,அறிவு மழுங்கியும் காணப்படுகின்றனர் .

brain

குழந்தைகள் ஜங் ஃபுட்களை அதிகம் சாப்படுவதால், அவர்கள் மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம், பதற்றம் மற்றும் உடற்பருமன் போன்ற பாதிப்புகள் உண்டாவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .

இந்த வகை உணவுகலால்  குழந்தைகளுக்கு கல்வியில் கற்றல் குறைபாடு, மறதிநிலை, விழிப்பு நிலை குறைபாடு மற்றும் புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் போன்றவை உண்டாகி குண்டாகி இருக்கின்றனர் .

பல குழந்தைகள் வறுத்த உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் மட்டுமே உண்கின்றனர் .இவற்றை சாப்பிடுவதால், உடலின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக பல மன நல மருத்துவர்கள் கவலை படுகின்றனர் .

இனிப்பு வகைகள் , பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள் மற்றும் செயற்கை ஜூஸ் வகைகளை ,சாப்பிடுவோருக்கு  நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகின்றது.