மாத்திரையில்லாமல் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைப்பது இப்படிதான்

 
tablet

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவது கவலை தரும் விஷயம் .குறிப்பாக இளம் வயதினர் பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கின்றனர் .இன்னும் பலர் அதன் அறிகுறிகளை அலட்சியப்படுத்தி விட்டு நோய் முற்றியவுடன் சிகிச்சைக்கு செல்கின்றனர் .இதனால் பல உறுப்புகள் செயலிழப்புக்கு ஆளாகின்றனர் .இந்த நோயை அலட்சியடுத்தினால் இதன் விளைவாக ஹார்ட் அட்டாக் ,பக்கவாதம் ,சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் உண்டாகிறது ,

bp

உயர் இரத்தஅழுத்தம்  எதனால் ஏற்படுகிறது அதன் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள்

1.அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 70% வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவதன்  மூலமும் 30% மருத்துவ முறையின் மூலமும் கட்டுக்குள் கொண்டு வந்து ஆரோக்கியமாக வாழலாம் .

2. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் உங்கள் உடல் இயக்கங்களை அதிகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால் அவர்களின் உடலுக்கு நல்லது 

3.அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது பல நோய்களில் இருந்து பாதுகாத்து அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் .

4.அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த அளவு சோடியம் அதாவது உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். சத்தான உணவு முறையை பின்பற்றி வந்தால் நலம் 

5.அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்றவற்றை முற்றிலும் கைவிட்டால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாய் வாழலாம்