உயரும் ரத்த அழுத்தத்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா ?

 
bp

பொதுவாக நமக்கு சிலவகை உணவுகள் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் .கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள் ,துரித உணவுகள் ,எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள் ,பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமக்கு ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் ஆற்றல் கொண்டவை .இப்படி உயரும் ரத்த அழுத்தத்தால் என்ன பாதிப்பு வரும்னு தெரிஞ்சிக்கோங்க இந்த பதிவில் .

1.சிலருக்கு பல  காரணத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும் .அப்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியும். 
2.அந்த பிபி அதிகமாகும் நேரத்தில் இரத்தம் தடித்தாலோ, இரத்தத்தில் உள்ள நீரின் அளவு அதிகரித்தாலோ இரத்த நாளங்கள் சுருங்கினாலோ ஆபத்து ஏற்படலாம்.
3.இந்த ரத்த அழுத்தம் அதிகமாகும் சூழ்நிலைகளில் இதயம் இரத்தத்தை மிகவும் கடினமாக பம் செய்கின்றது. 
4.இதனால் இரத்த அழுத்தம் கடினமாகிறது. இப்படியே தொடர்ந்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்
5.இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தினால் அந்த ரத்த நாளங்கள் சிறிதாக கிழியக்கூட வாய்ப்பு உண்டு. 
6.இந்த ரத்த அழுத்தத்தால் திசுக்கள் வீங்கும், வெள்ளை அணுக்கள் உடனே வந்து சேரும், 
7.இது தவிர கொழுப்புச்சத்தும் படரும், இதனால் இரத்த நாளங்கள் மேலும் சுருங்கி இரத்த அழுத்தம் கூடும்.
8.நமது உடலுக்கு தொடர்ச்சியாக செல்ல வேண்டிய இரத்தம் தடுக்கப்படும்  
9.இப்படி தடுக்கப்படும்போது அந்த இடங்களில் ஆக்சிஜன் மற்றும் சத்துப்பொருட்கள் குறைபாடுகள் ஏற்படும்.
10.இதனால் அவ்விடங்களில் உள்ள உயிரணுக்கள் மடியத் தொடங்கும். 
11.இந்த உயரும் ரத்த அழுத்தத்தால் இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம்.