எலும்புகளின் வலிமைக்கு உதவும் எட்டு பழக்கங்கள்

 
bone

பொதுவாக எலும்புகளின் வளர்ச்சி 35 வயதிற்கு மேல் இருக்காது .அதன் பின்னர் சரியான கால்சியம் சத்து இல்லாதோருக்கு எலும்பு உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் .மேலும் மாதவிடாய் நின்று போன 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் ,எந்த உடற் பயிற்சியும் செய்யாத ,உட்கார்ந்த இடத்திலேயே இருக்கும் ஆண்களுக்கும் ,தசை வலிமை குறைந்தோருக்கும் ,ஒல்லியான தேகம் உடையோருக்கும் இந்த எலும்பு பிரச்சினை இருக்கும் ,மேலும் அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோருக்கு இந்த எலும்பு வலிமை குறைவாக இருக்கும்

bone

எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானவை கால்சியம் ஊட்டச்சத்தும் மற்றும் சரியான உடல் வேலை.

அதிகாலை சூரிய உதயம்

பொதுவாக இன்றைய தலைமுறை இரவு லேட்டாக தூங்குவதால் சூரிய உதயத்தை பார்ப்பதே இல்லை. இந்த உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருந்தால் எலும்பின் வலிமைக்கு நல்லது என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து கொண்டால் எலும்பு வலிமையடையும்

சிலர் தினமும் அசைவம் சாப்பிட்டு அதிகம் புரத சத்து சேரும் ,இப்படி அதிகப்படியான புரதம் வேண்டாம்.

சிலர் ஓவராக டீ காப்பி குடிப்பர் ,ஆனால் எலும்புக்கு அளவான டீ, காபி.போதும்

எலும்புகளுக்கு தினம் ஏதாவது உடற்பயிற்சி அவசியம்,இல்லையெனில் ஜாக்கிங் ,சைக்கிளிங் போதும்

எலும்புகளின் வலிமைக்கு உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்,கிரிக்கெட் ,பாட்மிண்டன் ,கபடி போன்ற விளையாட்டுகள் எலும்பினை காக்கும்

சோடா மற்றும் கோலா பானங்கள் எலும்பை கரைக்கும் .அவற்றை தவிருங்கள்