மூட்டு வலி ,இடுப்பு வலி போன்ற வலிகள் தோன்ற என்ன காரணம் தெரியுமா ?

 
moottu pain tips from aththi milk

பொதுவாக முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எலும்புகள் பலவீனமடைய தொடங்குகின்றன .மேலும் சில பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னர் எலும்புகள் பலவீனமடைவதால் மூட்டு வலி ,இடுப்பு வலி போன்ற வலிகள் தோன்றும் .இந்த பெண்களின் எலும்பு பலவீனத்துக்கான காரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பெண்கள்  உண்ணும் உணவில் கால்சியம், வைட்டமின் D போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதநிலையில் எலும்புகளின் அடர்த்தி குறையலாம்.
2. சில பெண்கள் உடற்பயிற்சி இன்மை மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பர் .இப்படி இவை இல்லாத வாழ்க்கை முறை போன்ற சூழல்களாலும் எலும்புகள் பலவீனம் அடையலாம்.
3.மாதவிடாய் நின்ற , பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது எலும்புகள் பலவீனமடைகின்றன. 
4.மேலும் பாராதைராய்டு ஹார்மோன் (PTH), தைராய்டு  ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளாலும் எலும்புகள் பலவீனமடையலாம்.
5.ஒரு பெண்ணின் குடும்ப உறுப்பினருக்கு  எலும்பு அடர்த்தி பிரச்சனை இருந்தால், மரபணு ரீதியாக அந்த பெண்ணுக்கும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
6.சில பெண்கள் ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற பிரச்சனைகளுக்காக மருந்துகளை சாப்பிடுவர் .இப்படி எடுத்துக்கொள்வதாலும் எலும்புகளின் அடர்த்தி குறையலாம். 
7.இது போன்ற நோய்களுக்கு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்