உடல் சூடு குறைய உடனடி தீர்வுகள்

 
vendhayam

உடலில் சூடு அதிகமாகி விட்டால் நம் உடலில் பல உபாதைகள் தோன்றும் .உதாரணமாக சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ,வயிற்று வலி ,சளி ,சூடு கட்டி போன்ற தொல்லைகள் ஏற்படும் .எனவே இந்த பிரச்சினைகளை தவிர்க்க பின் வரும் இயற்கை வழிகளை பின்பற்றினால் உடல் சூடும் குறையும் அதனால் ஏற்படும் வியாதிகளும் வராது .

urin

1.முதலில் ஒரு கரண்டியில் கொஞ்சம் நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள் .பின்னர் அதை அடுப்பில் சூடு படுத்தி அதில் பூண்டு மற்றும் மிளகை போடுங்கள் .பின்னர் அது  ஆறியவுடன்  இரண்டு காலில் உள்ள கட்டை விரல்களில் வைத்து விட்டு இரண்டு நிமிடம் கழித்து வாஷ் செய்து விடுங்கள் .சிறிது நேரத்தில் உடல் சூடு மற்றும் மன அழுத்த்ம் குறையும் .இதுபோல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வரலாம்

. -

 2 : வெந்தயம் உடல் சூடு குறைய பெரிதும் உதவுகிறது. முதல் நாளே வெந்தயத்தினை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள் .பின்னர் அந்த ஊறவைத்த வெந்தயத்தினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும் உடல் சூடு பறந்து போகும்

 3 : உடல் சூடு உள்ளவர்கள் வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை காய வைத்து பொடி செய்து விடுங்கள் .பின்னர் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் உடல் ஹீட் இருக்கவே இருக்காது