உடல் சூட்டால் அவதிபடுறீங்களா ?உங்களுக்குத்தான் இந்த பதிவு

 
sun


உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. 'அக்கி' மிக முக்கியமானதாகும். நீர்ப்பை, நீர்ப்பாதையில் வெப்பம் அதிகரித்து நீர்கடுப்பு, நீர்கட்டு, கல்லடைப்பு, வெள்ளைபடுதல், நீர்வேட்கை போன்ற நோய்கள் வருவதுண்டு, வறட்டு இருமல், ரத்த அழுத்தம், தலைவலி, உடல் கொப்பளங்கள், பரு, ஆசன வாய் எரிச்சல், மூலம் போன்றவை கோடையில் அதிகம் தாக்கும் நோய்கள்.

வெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்!

நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் உஷ்னத்தை குறைக்கலாம் 
நல்லெண்ணையை நன்றாக தலையில் தேய்த்து சிறிது நேரம் தலையில் எண்ணெய் ஊற வைத்த பின்னர் வெண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் உடலும் வெப்பத்தை குறைக்க முடியும்.

உணவு பொருட்கள் மூலமும் உடலின் வெப்பத்தை குறைக்க முடியும்.தர்ப்பூசணி பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலின் வறட்சி நீங்கும் ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.

கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்க கூடிய வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலின் வெப்பம் குறையும். இதில் அதிகமான நீர் சத்து இருப்பதால் உடல் வெப்பத்தை குறைப்பதோடு வறட்சியையும் குறைகிறது.

வெந்தயம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறையும். இது மிகவும் பழமையான இயற்கை வைத்தியத்தில் ஒன்றாகும். உடல் வெப்பத்தால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வெந்தயம் சாப்பிடுவதால் வயிற்று வலி குறையும் மேலும் உடலின் வெப்பமும் குறையும்.

இரவில் தூங்குவதற்கு முன் சீரகத்தை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து பின் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடலின் வெப்பம் குறையும்.

எள்ளுக்குள் உடல் உஷ்னத்தை குறைக்கும் பல நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளது 
தினமும் எள் சாப்பிடுவதாலும் உடலின் வெப்பம் கணிசமாக குறைந்து வரும் .மேலும் உடலின் நீர் சத்தும் அதிகரிக்கும்.

கசகசா உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மையுடையது .
தினமும் கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வண்டல் உடலின் வெப்பம் குறையும் மேலும் நன்றாக உறக்கம் வரும்.எனவே தூங்குவதற்கு முன் கசகசா சாப்பிடுவது நல்லது.


மாதுளை பழத்தில் அதிகப்படியான நீர் சத்து உள்ளது எனவே தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்).

இளநீர் குடிப்பதால் உடலின் வெப்பம் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்.
காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக, இளம் சூடான தண்ணீர் நான்கு டம்ளர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.
பப்பாளியை தினமும் 100 கிராம் அளவில் உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.
அத்திப்பழத்தை (ஐந்து பழங்கள்) இரவு முழுவதும் நீரில் ஊறவைத்தோ, அல்லது வெறும் நீரில் கழுவியோ காலையில் சாப்பிடலாம். 
பேரீச்சை (மூன்று), உலர்திராட்சை (50 கிராம்) இந்த இந்த இரண்டையும் நன்கு கழுவி, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். பேரீச்சை ஊறவைத்த தண்ணீர், இரும்புச்சத்து டானிக்போல தித்திப்பாக இருக்கும். அதே நேரத்தில் பேரீச்சையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.