உடல் வெப்பமடைவதை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன தெரியுமா ?
பொதுவாக வெயில் காலத்தில் நம் உடலில் பல்வேறு உடல் நல கோளாறுகள் உண்டாகும் .இந்த கோளாறில் மிக முக்கியமானது உடல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஆகும் .இந்த உடல் வெப்பமடைவதை தடுக்க நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் .எப்படி உடல் சூட்டை குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடல் சூடு அதிகமானால் வாய்ப் பகுதிக்குள் கொப்பளம் ஏற்பட்டு தொல்லை கொடுக்கும்
2.இந்த உடல் சூடு உண்டாகும்போது உடலை குளிர்விக்க வேண்டியது அவசியமாகும்.
3.இந்த உடல் சூடு குறைய நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
4.இந்த உடல் சூடு குறைய கரும்புச் சாற்றை நீர் ஆகாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
5.உடல் சூடு அதிகமாக இருப்பின் கண் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும்.
6.உடல் அதிகமான வெப்பத்தை உணரும்போது கண் எரிச்சல் ஏற்படும்.
7.கண்களில் நீர் வடிதல், கண்களில் கொப்பளம் ஏற்படல் போன்றனவும் உடல் சூடு அதிகமாகும்போது ஏற்படும்.
8.இந்த உடல் சூடு குறைய இளநீர், பதநீர், நுங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும்..
9.உடல்சூடு அதிகரித்தால் பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இளநீர் பருகுவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்.
10.அடுத்து கோடைக்காலத்தில் நாம் அருந்தும் நீரினாலும், உணவினாலும் வயிற்றுக்கோளாறுகள் வரும். .
11.இந்த உடல் சூடு குறைய புதினாவைத் துவையல், சட்னி எனப் பல்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொள்ளலாம் .மேலும் வயிற்றுக்கோளாறுகள் சரியாகும்.
12.அதிக உடல் சூடானது குழப்பத்திற்கு வழிவகுக்கும், நினைவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும்.அதனால் இந்த உடல் சூடு குறைய முயற்சி எடுக்க வேண்டும்

