வெண்ணெய் போல தொப்பையை கரைக்க இந்த எண்ணெய் உணவினை விடுங்க

 
stomach

இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பலருக்கு உடல் உழைப்பேயில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் .காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் லேப்டாப்பில் பணி புரிந்து வருவதால் மிக இளம் வயதிலேயே தொப்பையும் ,தொந்தியுமாக காணப்படுகின்றனர் ,மேலும் பலர் ஒபிசிட்டி பிரச்சினையால் அளவுக்கதிகம்க உடல் எடை பெருகி பல நோய்களுக்கு ஆளாகின்றனர் .இப்படி பெருத்துப்போன தொப்பையை வெண்ணெய் போல கரைக்க சில வழிகள் உள்ளன அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ten tips for thoppai

1.பலர் துரித உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2.பலர் விரும்பி உண்ணும் துரித உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் பருமன் உண்டாகி குண்டாக காணப்படுவர் .

3.இந்த பாஸ்ட் புட்டால் உண்டாகும்  கொழுப்பு, குறிப்பாக, இதய பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

4.மேலும் பலர் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் உண்பர் .இதில்  அதிக கலோரிகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இதன் காரணமாக, தொப்பையில்  கொழுப்பு அதிகரிக்கிறது.

5.பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

6.அதிக உடலுழைப்பு உள்ளோர் காலையில் தாராளமாக இறைச்சி உணவுகளை சாப்பிடலாம்.

7.ஒருவேளை உட்கார்ந்த  வேலையில் இருந்துகொண்டு காலையில் இறைச்சி சாப்பிடுவது, உடலுக்கு கேடு விளைவிக்கும்.