கரையாத கொழுப்பையும் கரைக்கும் இந்த தேனீர்

 
thoppai

ஒவ்வொருவர் உடலிலும் ஓவ்வொரு இடத்தில் கொழுப்பு சேர்ந்து அவர்களை பாடாய் படுத்தி வரும் .சிலருக்கு இடை பகுதியிலும் ,இன்னும் சிலருக்கு தொடை பகுதியிலும் ,இன்னும் சிலருக்கு தொப்பை பகுதியிலும் கொழுப்பு சேர்ந்து இருக்கும் .அவ்ர்கள் அந்த கொழுப்பை குறைக்க பல ஜிம்முக்கு சென்று கரைக்க முயற்சி செய்வதுண்டு .ஆனாலும் அந்த கொழுப்பு கரையாமல் இருக்கும் .இன்னும் சிலர் விலையுயர்ந்த சில கெமிக்கல் பவுடர் வாங்கி ஒரே மாசத்தில் குறைக்கலாம் என்ற போலியான விளம்பரத்தை நம்பி பணத்தை செலவழிப்பது உண்டு .இதனால் பணம்தான் செலவு ஆகுமே தவிர உடலில் கொழுப்பு குறைந்த பாடு இருக்காது .அவர்களுக்கு கொழுப்பை கரைக்க சில எளிய ஒரு பானத்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி கூறுகிறோம்

ten tips for thoppai

1.முதலில் கொழுப்பை கரைக்க ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

2.அதன் பிறகு, அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலக்கவும்.

3.பின்னர் அதில்  கருப்பு மிளகு மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி கலந்து கொள்ளவும் .பின்னர் சுமார் 10-15 நிமிடங்கள் அந்த கலவையை கொதிக்க விடவும்.

4.அதன் பிறகு, அந்த சாற்றை எடுத்து வடிகட்டவும். பிறகு வடிகட்டிய தேநீர் சற்று ஆறியவுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மெதுவாக உட்கொண்டு வரலாம் .

5.இந்த ஆரோக்கிய டீயை ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால், சில நாட்களில் உங்கள் கொழுப்பு கரைய ஆரம்பித்து உங்களின் ஆரோக்கியம் சிறக்கும் .