இரவில் குளிப்பதால் ,என்ன ஆரோக்கியம் கிடைக்கும் தெரியுமா ?
பொதுவாக குளிப்பது என்ற சொல்லின் அர்த்தம் குளிர்விப்பது என்ற சொல் மருவி வழங்கப்படுகிறது .நம் உடலை உஷ்ணத்திலிருந்தும் ,கிருமிகளிடமிருந்தும் பாதுகாக்க குளிக்கும் பழக்கம் உருவானது ,இந்த குளியலை எந்த நேரத்தில் எடுத்து கொண்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலிலும் மனதிலும் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும்..
2.நாள் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு இரவு நேரத்தில் குளித்து விட்டு தூங்கினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையால் பருக்கள் வராமல் தடுக்கலாம்
3.பருவக்காலத்திற்கு ஏற்றார் போல அலர்ஜிகள் உண்டாகும் .
4.இப்படி அலர்ஜி ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்களை தொற்றிக் கொள்ளும்.
5.இந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளித்து விட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும் ,அலர்ஜியும் வராது .
6.உங்கள் சருமம் சீராக இருக்க ஹார்மோன்களின் உற்பத்தி சீராக இருக்க வேண்டியது அவசியமாகும்.
7.எனவே இரவு நேரத்தில் குளிப்பது உங்கள் உடலின் மேற்புறத்தில் இருக்கும் ஹார்மோன்களை சுத்தம் செய்வதன் மூலம் ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும்.



