ஆரோக்கியமாய் வாழ எப்படி குளிக்கணும் தெரியுமா ?

 
bath

பொதுவாக குளிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் நம் உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.வாரம் ஒருமுறை உப்பு கலந்த தண்ணீரிலோ அல்லது கடலிலோ குளிக்க வேண்டும் .அதனால் தான் அந்த காலத்தில் அமாவாசையன்று கடலில் நீராட சொன்னார்கள் .
2.அதுபோல் குளித்து முடித்தவுடன் முதலில் தலையை துவட்ட கூடாது .

bath
3.முதலில் முதுகை மென்மையான துண்டு மூலம் அழுத்திடாமல் துடைத்து  விட்டு பின்னர் தான் தலையில் மெதுவாக துவட்ட வேண்டும்

4.சிலர் நீண்ட நேரம் குளிப்பதுண்டு . அது உங்கள் சருமத்திற்கு தேவையான அத்தியாவசிய எண்ணெய்களையும் அகற்றிவிடும் .
5.இவை இயற்கையான மாய்ஸ்சரைசர்களை அகற்றுவதால் உங்கள் சருமம் வறட்சியாகவோ, வெளிர் நிறமாகவோ கூடிய விரைவில் மாறக்கூடும்.

6.சிலர் வெந்நீரில்தான் வெயில் காலங்களில் கூட குளிப்பர் .ஆனால் சூடான நீர் சருமத்திற்கு நல்லதல்ல.
7.இது நம் உடலில் இரத்தத்தின் மேற்பரப்பில் விரைந்து சென்று வீக்கத்தைத் தூண்டும். மாறாக, வெதுவெதுப்பான நீரின்  10 நிமிடங்கள் மட்டுமே குளித்து வந்தால் நம் ஆரோக்கியம் சிறக்கும்