வளையல் அணிய மறுக்கும் மாடர்ன் பெண்களே !அதன் ஆரோக்கிய ரகசியம் தெரியுமா ?

 
bangles bangles

அழகுக்காக பெண்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களில் அச்சரியமூட்டும் மருத்துவ பண்புகள் உண்டு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. கையின் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் பெண்கள் வளையல்களை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு மார்பக புறறுநோய் தவிர்க்கபப்டுவதாக ஓராய்வில் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு உதாரணமாக குறத்தி எனப்படும் லம்பாடி பெண்கள், மணிக்கட்டு முதல் முழங்கை வரை உள்ள இடைப்பட்ட பகுதி முழுக்க வளையல்கள் அணிந்து இருப்பதால்தான் அவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதே இல்லை என்று சொல்லப்படுகிறது.

2. ஒலிகளுக்கு ஏங்கும் கருவில் உள்ள குழந்தைகள்:

மேலும் வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுவதாக சொல்லப்படுகிறது

வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி அணியப்படும் வளையல், மேலும் கீழுமாக அசைவுறப் பெறுவதால் ஒரு சின்ன சூடு உண்டாகும். இது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.

இப்போது பல வடிவங்களில் வளையல்கள் கிடைக்கின்றன. ஆனால், பாரம்பர்ய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது. வளையலின் சிறப்பம்சமே, அதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்கக் குலுங்க வளையல் அணிபவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.

தங்கம், வெள்ளி, கண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது பரிந்துரைக்கத்தக்கவை. பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம். உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும். பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால், கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது. 

`சீ ஷெல்’ (சிப்பி, கிளிஞ்சல்) வளையல் கள் அணிந்தால், வாயுத்தொல்லையில் இருந்து  நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை’
‘‘கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம், ஒரு சிறந்த ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வயிற்றில் இருக்கும் குழந்தையும் நல்ல மூளை செயல்பாட்டுடன் வளரும். பின், வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ளலாம் 
குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும், கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.