உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது இந்த நல்ல பொருட்கள்

 
oats

பொதுவாக நம் இதயத்துக்கு நலம் சேர்க்க கெட்ட கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்து நல்ல கொழுப்புள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்வது நலம் .இந்த பதிவில் எந்த உணவு பொருளில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது என்று பார்க்கலாம் 
 
1.நல்ல கொழுப்பை உங்கள் இதயத்தில் சேர்க்க  ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
2.ஓட்ஸ், தினை, பார்லியில்  உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது. 
3.மேலும் நம் இதயத்துக்கு நலம் சேர்க்கும் பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை. 
4.அந்த பொருட்கள் இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகிய நோய்கள் வராமல் பாதுகாக்கும் . 
5.நல்ல கொழுப்பை உங்கள் இதயத்தில் சேர்க்க பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக்கொள்ளலாம் . 
6.நம்முடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். இவற்றில் நார்ச்சத்து, மினரல்கள் அதிகம் உண்டு 
7.பொதுவாக பூண்டில் இருக்கும் மருத்துவகுணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது .
8.பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள், நமது இதயத்தைக் காக்கக்கூடியது. 
9.மேலும் பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. 
10.சிவப்பு ராஸ்பெரிஸ், இனிப்பு செரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி ஆகிய ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த இவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வதுநம் ஹார்ட்டுக்கு நலம் சேர்க்கும்