அத்தி மர இலைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

பொதுவாக அத்தி பழமானது இயற்கையாக கிடைக்கும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒன்றாகும் .இந்த பழமானது மரத்தின் அடிமரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும்.இந்த பழத்தை நாம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மை குடித்து இந்த பதிவில் பாக்கலாம்
1.பொதுவாக பழங்களில் மிகுந்த மருத்துவகுணம் கொண்டது அத்திப்பழமாகும்.
2.மற்ற அனைத்து பழங்களைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இந்த பழத்தில் அதிக இரும்புச் சத்தும் உள்ளது
3.இந்த அத்தி பழத்தில் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்து பொருட்கள் காணப்படுகின்றன
4.தினமும் 2 பழங்கள் வீதிம் சாப்பிட்டாலே போதும். உடலில் இரத்த உற்பத்தி அதிகரித்து உடல் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
5.தினமும் உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு அத்தி விதைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.
6.பற்களின் ஈறுகள் சீழ்பிடித்தலோ அல்லது வலித்தாலோ இப்பழத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும் .
7.அத்தி மர இலைகளை வெயிலில் உலர வைத்து தூள் ஆக்கி கொள்ளவும் .இந்த தூளை தேனில் கலந்து சாப்பிட்டு வர பித்தம் மற்றும் அதனால் வரும் நோய்களும் குனமாகும்.
8.இந்த அத்தி பழத்தின் மூலம் சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள், நீர்க்கட்டிகள், புண், சொறி, சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகிறது .
9.சிலருக்கு மூட்டு வலி இருக்கும் .இம்மரத்தின் பட்டையை ஊற வைத்து காலையில் குடிநீராக குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணமாகும்.
10.சிலருக்கு மூல நோயிருக்கும் .அவர்கள் அத்தி பழத்தை சாறு பிழிந்து அந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.