அத்தி பழத்தை தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயங்கள்

 
aththi aththi

அத்தி பழத்தின் இலை ,வேர் அனைத்தும் மருத்துவ குணமுள்ளது .அத்தி இலைச் சாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துது. சிலவகை புற்று நோய்கள தடுக்குதுனு கூட கண்டுபிடிச்சிருக்காங்க.  கண் சம்பந்தமான நோய்கள தடுக்குது; சிறந்த ஆன்டி ஆக்சிடென்டா (anti oxidant) செயல்படுது.இருதயத்த பலப்படுத்தி, இரத்தவிருத்தி செய்யும். அத்திப் பட்டையை பசும் மோர்விட்டு இடிச்சு பிழிஞ்சு சாறெடுத்து நிதமும் 3 முறை 20ml அளவு கொடுக்க பெரும்பாடு நின்னுடும்.இப்போது அத்தி பழத்தின் நன்மைகளை பார்க்கலாம்

aththi

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மூன்று விஷயம் என்னவென்றால், அத்திப்பழம் பேரிச்சம்பழம் தேன் இவை மூன்றையும் சொல்லலாம். இவை மூன்றையும் குறைவான அளவில் தினமும் சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும்

அத்தி பழத்தை தேனில் கலந்து சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களையும் குணமாக்குகிறது. மேலும் அத்திப்பழத்தில் தேன்  கலந்து சாப்பிடுவதால் மூல நோய்கள் குணமாகும்.நமக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்

 இந்த பழத்தில் கரையும் சத்து ,கரையா சத்து உள்ளது .இதில்  ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. இரவில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.