பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா ?

 
stomach

தமிழர்கள் சமையலில் சேர்க்கும் அனைத்து பொருளிலும் ஒரு மருத்துவ குணமுண்டு .அந்த வகையில் சமையலில் சேர்க்கும் பெருங்காயத்தில் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .வாசனை மிக்க பெருங்காயத்தை வறுத்து பல்வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி பறந்து போகும் ,மேலும் அஜீரண கோளாரு ,மலசிக்கல் கோளாறு ,ஆஸ்துமா ,வயிற்று வலி ,வயிறு உப்பிசம் ,ரத்த அழுத்தம் போன்ற நோய்களை பெருங்காயம் குணமாக்கும் ,மேலும் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

perunkayam

1.சில பெண்களுக்கு மாத விடாய் ஒழுங்காக வராது .பெருங்காயம் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் பெற உதவுகிறது.

2.ஒரு கப் மோரில், ஒரு சிட்டிகை பெருங்காயம், வெந்தயம் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதை மாதவிடாய் காலத்தில் குடித்தால் முறையாக மாத விடாய் வரும்

3.சிலருக்கு தலை வலி தீராது .பெருங்காயம் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

4.சிறிது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனை சூடாக்கி எடுத்து அந்த கரைசலை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர தலை வலி போயிடும் .

5.பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி ஓடி போயிடும் .

6.சிலருக்கு பல்வலி பாடாய் படுத்தும் .எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.