அருகம்புல்லுடன் நெருஞ்சிலை காய்ச்சி சாப்பிட எந்த நோய் விலகும் தெரியுமா ?

 
arukampul

பொதுவாக சாலையோரம் காணப்படும் நெருஞ்சில் செடி நமக்கு பலவேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .இந்த நெருஞ்சிலை கொண்டு எவ்வாறு ஒரு மூலிகை மருந்தை தயார் செய்து நோய்களை குணமாக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக நெருஞ்சில் சிறுநீரக கல்,நீரடைப்பு, வெள்ளை நோய்,நீர் எரிச்சல்,வண புள்ளி,மேகம் போன்ற நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது .

kidney

2.நெருஞ்சிலில் ஒரு வகையான ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும் ஆற்றல் கொண்டது

3.அடுத்து ஒரு மருந்தை நெருஞ்சில் மூலம் தயார் செய்யலாம் .முதலில் ஒரு பிடி அருகம்புல்லுடன், இரண்டு  நெருஞ்சில் செடியை வேருடன் பிடிங்கி  கொள்ளவும்

4.அடுத்து மண் பானையில் ஒரு லிட்டர் நீருடன் நெருஞ்சிலை சேர்த்து அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி விடவும்

5.அந்த காய்ச்சிய நீரை ஒரு நாள் இரண்டு வேளை 50 மி.லி. வீதம் மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் வெப்பம் தணியும்.

6.இந்த நீரினை குடித்தால் நீர் வடிதல், சிறுநீர் சொட்டாக வருதல்கண் எரிச்சல், போன்றவை குணமாகும்.

7.அடுத்து ஒரு மருந்தை தயார் செய்வோம் .நெருஞ்சில் வேரையும் , காயையும்  ஒரே அளவாக எடுத்து கொள்வோம்

8.அந்த நெருஞ்சிலுடன் , பச்சரிசி சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்து வரலாம்

9.இதன் மூலம் நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர்க்கடுப்பு குணமாகும்.