அருகம் புல் மற்றும் கரும்பு சாறு குடிப்பதால் குணமாகும் நோய்கள்

 
arukampul

பொதுவாக இளநீர் குடிப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.மேலும் இளநீர் போலவே அருகம் புல் மற்றும் கரும்பு சாறு குடிப்பதாலும் பல்வேறு நன்மைகள் உண்டு .இது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் 

1. ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
2.அருகம்புல் சாறு குடிப்பதால் அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். 
3.அருகம்புல் சாறு குடிப்பதால் குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
4.அருகம்புல் சாறு குடிப்பதால் சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். 
5.அருகம்புல் சாறு குடிப்பதால் புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
6.கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. 
7.கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

Advertisement