இந்த பழம் இத்தனை நோய்கள் வராமல் தடுக்குமா ?

 
health

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம் என்று ஒரு மருத்துவ குறிப்பு உள்ளது .ஆம் அந்தளவுக்கு ஒரு ஆப்பிளில் ஒரு நாளைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளது .தினம் ஆப்பிள் சாப்பிடுவதால் மூளை செல்கள் ஆரோக்கியம் பெற்று ,நம் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கும் .மேலும் கண்புரை நோய் முதல் ஞாபக சக்தி குறைபாடு போன்றவற்றை தடுக்கலாம் .இந்த பழத்தை சர்க்கரை நோயுள்ளோரும் சாப்பிடலாம் .இந்த பழத்தின் மற்ற நன்மைகளை பார்க்கலாம்

apples

1.ஆப்பிள் பழம் அதிக ஊட்டச்சத்து கொண்டது.

2.ஆப்பிள் பழத்தில் விட்டமின்கள், நார்ச்சத்து, புரதங்கள், தாதுக்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

3.ஒரு கப் ஆப்பிளில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது.

4.ஆப்பிள் பழம்  செரிமானத்தை அதிகரிப்பதற்கு உதவுகின்றது.

5.ஒரு ஆப்பிள் பழம்  உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும் உதவுகின்றது.

6.ஆப்பிள் பழச்சாற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், செரிமானக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கலாம் .

7.ஆப்பிள் பழத்தால் இதய நோய்கள், நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய்கள் போன்றவை வராமல் தடுக்கலாம்.