அன்னாசி பூ மூலம் நாம் அடையும் பயன்கள்

பொதுவாக பாரம்பரிய சீன மற்றும் நாட்டுப்புற மருத்துவ நடைமுறைகளில், நட்சத்திர சோம்பு அதாவது அன்னாசி பூ என்ற பிரியாணியில் சேர்க்க படும் பொருள் பயன் படுகிறது .இது பல்வேறு நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது இந்த நட்சத்திர சோம்பு அதாவது அன்னாசி பூ மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.நட்சத்திர சோம்பு அதாவது அன்னாசி பூ, சுவாச நோய்த்தொற்றுகள், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
2.இந்த பிரியாணியில் சேர்க்கப்படும் நட்சத்திர சோம்புக்குள் இரும்பு, மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின்கள் B1, B2, B3, B6, E, அடங்கியுள்ளது
3.வயதாகும் பொழுது நமது மூளையின் செயல்பாடு குறைவதால் ,மூளை சக்தியை அதிகரிக்கிறது நட்சத்திர சோம்பு.
4.நட்சத்திர சோம்பில் இயற்கையான மூளையை ஆரோக்கியப்படுத்தும் பூஸ்டர் உள்ளது.
5.இந்த நட்சத்திர சோம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
6.இந்த நட்சத்திர சோம்பில் மூளையின் மிகவும் சுறுசுறுப்பான பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை வேகமாக எடுத்துச்செல்லும் ஆற்றல் உள்ளது
7.சீன மருத்துவத்தில் நட்சத்திர சோம்பு ஒரு மூளை டானிக்காக கருதப்படுகிறது.
8.மேலும் இது மன தெளிவை அதிகரிக்கவும், நல்ல தூக்கத்தை கொடுக்கவும், நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும் இந்த நட்சத்திர சோம்பு உதவுகிறது.
9.சில ஆய்வுகள் நட்சத்திர சோம்பு மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றன.
10.. நட்சத்திர சோம்பில் உள்ள வைட்டமின் பி உட்கொள்வது பதட்டம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது .
11.இந்த நட்சத்திர சோம்பில் செலினியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.