நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவது எந்த நோய்க்கு சிகிச்சை தெரியுமா ?

 
honey

பொதுவாக நமக்கு அமிலத்தன்மை நீங்க அடிக்கடி நெல்லிக்காய் சாப்பிடுவது நலம் சேர்க்கும் ,மேலும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நம் ஆரோக்கியத்துக்கு பயன் படும் ,மேலும் இந்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மை பற்றி நாம் பார்க்கலாம்

1.நெல்லிக்காய் நமது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பயன் படுகிறது ,

amla

2.நெல்லிக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும்  உதவுகிறது.

3.முக்கியமாக ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதற்கு நெல்லிக்காய் உதவுகிறது.

4.இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு நெல்லிக்காய் முக்கிய அங்கமாக இருக்கிறது.

5.நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு அதிகரித்து , நினைவாற்றலும் அதிகரிக்கும்.

6.நமது முடிக்கு சரியான ஊட்டச்சத்தை நெல்லிக்காய் கொடுக்கிறது. பொடுகு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நெல்லிக்காய் சாப்பிட்டால் விடுபடலாம்.

7.தோலில் உள்ள புள்ளிகள் மற்றும் வயது சுருக்கங்களை தடுக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.

8.நெல்லிக்காயை அரைத்து மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து உடலில் தேய்த்து குளித்தால் சருமம் இயற்கையாகவே அழகாக மாறும்.

9.நெல்லிக்காய் சாப்பிடுவது அமிலத்தன்மை நிரந்தரமாக நீங்க பயன் படுகிறது 

10.அமிலத்தன்மை நிரந்தரமாக நீங்க இரவு உணவு முடித்த பிறகு ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.