ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி ?

 
amla

நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுகளை ,கழிவுகளையும்  வெளியேற்றிவிடும் .மேலும் நம் , உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்துவிட்டு , நம் உடலை சுறுசுறுப்பாக இயங்க  வைக்கிறது. மேலும் நெல்லிக்காய் சாப்பிட்டு வருபவர்களின்  இரத்தணுக்களின் அளவு அதிகரிபபதோடல்லாமல்  அவர்களின் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் அதிசய சக்தி கொண்டது .அதனால் இந்த நெல்லிக்காயை ஜாம் செய்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் .குழந்தைகளும்  விரும்பி சாப்பிடுவார்கள் 

நெல்லிக்காயில் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் அதிகம் உள்ளன. எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது இந்த நெல்லிக்காய்ஜாம்  சாப்பிடுபவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட்டு ,எலும்புகள் உறுதியாக இருக்கும் .
நெல்லிக்காய் ஜாம் செய்யும் முறை 

amla

தேவையான பொருட்கள்: 
ஒரு கிலோ நெல்லிக்காய், 
வெல்லம் - 1.25 கிலோ 
சுக்கு -  25கிராம் 
ஏலக்காய்  - 10கிராம்  
  செய்முறை: 
நெல்லிக்காயை கொட்டைகளை நீக்கிவிடவும் .பிறகு அதை  முக்கால் .லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து விடவும் .
பிறகு வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் சேர்த்து பாகுபோல் காய்ச்சவும்.
கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து கொதிநிலையில் உள்ள வெல்லபாகுடன்  சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.
இப்போது சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி. 
இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். 
ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.இந்த சுவையான நெல்லிக்காய் ஜாம் நம் உடலில் பல வைட்டமின் சத்துக்களை அள்ளி அள்ளி கொடுக்கும் .நெல்லி சாறுடன் தேன் கலந்து சாப்பிட மூளையும் உடலும் நல்ல பலம் பெறும்