தம்பதிகளுக்குள் தாறு மாறான தாம்பத்ய உறவுக்கு உதவும் சோற்று கற்றாழையை எப்படி எடுத்துக்கணும் தெரியுமா ?

 
hus wife

வேலியோரங்கள் வளர்ந்து கிடக்கும் சோற்றுக் கற்றாழைச் செடியின் மகத்துவமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் யாராலும் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் சமீப காலமாக அதிலிருக்கும் மருத்துவ குணங்களை அறிந்த பலர், அதனை தங்கள் வீட்டிலேயே வளர்க்கத் துவங்கிவிட்டனர். அப்படி என்னென்ன மருத்துவ குணங்கள் சோற்றுக் கற்றாழைச் செடியில் இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்..!

கற்றாழை!⁠⁠
 
கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.

சோற்றுக் கற்றாழையை அப்படியே சாப்பிடவும் செய்யலாம் அல்லது உடல் உறுப்புக்களில் தேய்த்துகொள்ளலாம்.

சோற்றுக் கற்றாழையை உண்பதால் ஆண்கள் மற்றும் பெண்களின் சிறுநீர் தாரையில் உள்ள புண் எரிச்சல், குணமாகும்.

சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் இரண்டு அவுன்ஸ் குடிப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு வராமல் இருக்கும்.

தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய தொடங்கும், உஷ்ணம் கல்  அடைப்புகள் சரியாகும்.

மூல கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்றாழை மிகச்சிறந்த மருந்தாகும் இதன் சதைப் பகுதியை கழுவி அதனுடன் இரண்டு கைப்பிடியளவு முருங்கைப் பூ சேர்த்து அம்மியில் வைத்து அரைக்க வேண்டும் அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து எலுமிச்சை அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மூல தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்துகொள்ள வேண்டும் பிறகு அதை உலர வைத்து பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவு மேம்படும்.

சோற்றுக் கற்றாழை ஜூஸ்:

சோற்றுக் கற்றாழையின் தோலை நன்றாக சீவி உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு சொம்பு ஒரு கலந்து சிறிதளவு எலுமிச்சை பழம் பிழிந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இதனை தினமும் குடித்து வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் பருக்கள் தோலின் கருமை போன்றவை குணமாகும்.