உங்களுக்கு அடிக்கடி ஒவ்வாமை ஏற்படுதா ?அதுக்கு இதுதான் காரணம்

 
tips to cure itching

பொதுவாக ஒருவருக்கு கத்திரிக்காய் அலர்ஜி ,சிலருக்கு கருவாடு அலர்ஜி ,சிலருக்கு காற்று கூட அலர்ஜி ஏற்படுத்தி விடும் .இப்படி அலர்ஜியின் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் .இந்த அலர்ஜியால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பாதிப்பை உண்டாக்கும் .சிலருக்கு முகம் கை கால் எல்லாம் வீங்கி விடும் .இன்னும் சிலருக்கு தண்டிப்பாக உடல் முழுதும் வந்து அரிக்கும் .இன்னும் சிலருக்கு மூச்சிரைப்பு ஏற்படும் ,இப்படி வரும் அலர்ஜி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

brinjal

 முட்டை, பசுப்பால், கெட்டி தயிர், கடல் மீன்கள், கருவாடு, கோதுமை, மக்காச்சோளம், முந்திரி, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தம்பழம், வாழைப்பழம், பட்டாணி, பாதாம், சோயா பீன்ஸ், சாக்லேட்டில் உள்ள கொக்கோ, சோடா போன்றவைகள் அதிகம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக பேஷன்டுகளிடமிருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மீன்களில் கடல் மீன்கள் தான் ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்தி ஒற்றை தலைவலியை உண்டாக்குகின்றன.

மேலும் லட்டு, ஜாங்கிரி, கேசரி போன்ற இனிப்பு வகைகள் மற்றும் பஜ்ஜி, போண்டா போன்ற கார வகைகளில் நிறம் கொடுக்க சேர்க்கப்படும் காரிய ஒக்சைட் பலரின் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தி உடல் முழுவதும் அரிப்பை உண்டாக்குகின்றன.