எப்போதும் சோர்வா இருக்கீங்களா ?இந்த டிப்ஸை பின்பற்றுங்கள் சுறுசுறுப்பாயிடலாம்

 
eight walk

பொதுவாக  சுறுசுறுப்பாக இருக்க முதலில் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுங்கள் .கிரிக்கெட் ,பாட்மிண்டன் ,டென்னிஸ் போல ஏதாவது ஒரு விளையாட்டை தினமும் உங்களின் நண்பரோடு விளையாடி மகிழுங்கள் .சுறுசுறுப்புக்கு என்ன செய்யலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.நடனமாடுங்கள் .அல்லது சைக்கிளிங் ஒட்டி கொண்டு நீண்ட தூரம் செல்லலாம் .அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் ,
2.மேலும் மாடி படிக்கட்டு ஏறி போகலாம் .அல்லது எக்சர்சைஸ் செய்யலாம் .மேலும் சில வழியை பின்வருமாறு கூறியுள்ளோம்

walking
3.இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் ,நீரிழிவு மற்றும் வயது முதிர்வு, பயணம்,வேலை போன்றவைகளால் உடல் சோர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு:
4.தினமும் சரியான அளவு தூக்கமில்லாமல் இருந்தால் உடல் சோர்வு ஏற்படும், ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
5.ஆகவே தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழும்பும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.  
6.வாக்கிங், யோகா, ரன்னிங் போன்ற சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் அப்போது நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம்
7.காலை உணவை தவராமல் சாப்பிட வேண்டும். காலை உணவு மிக  முக்கியமானது. சரியான வேளைகளில் சாப்பிட வேண்டும்.அனால் அடிக்கடி சாப்பிடக்கூடாது .மேலும் தண்ணீர் போதிய அளவு குடிக்க வேண்டும்.