உங்க குழந்தை நாள் முழுவதும் சுறுசுறுப்பாயிருக்க உதவும் உணவுகள்

 
Children

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான  ஆரோக்கிய உணவு தயாரிப்பதில் பல தாய் மார்கள் தினமும் மண்டையை பிய்த்து கொள்கின்றனர் .எந்த உணவு கொடுத்தால் பிள்ளைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள் என்று யோசித்து குழம்புகின்றனர் .அப்படி சில ஆரோக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான காலை உணவில் குழந்தைகளுக்கு ரவை உப்புமா கொடுக்கலாம். உப்மா செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். ஆனால் அதில் காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் உப்புமாவாக செய்துக் கொடுக்க வேண்டும். அல்லது வெஜிடபிள் சாதம் கொடுத்தால் அதிலிருக்கும் காய் கறிகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

child

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவில் வேர்க்கடலை இருப்பது நல்லது.அதற்கு , வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட் ஒரு நல்ல தேர்வாகும். இரண்டு ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்து, அதில் சியா விதைகள், நறுக்கிய வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும். ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய பிரெட் டோஸ்ட் ரெடி. மேலும் கால்சியம் சத்துக்காக பால் கொடுக்கலாம் ,பால் குடிக்காதவர்களுக்கு மில்க் ஷேக் செய்து தரலாம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான குழந்தைகளின் உணவிலும் கஞ்சி சேர்க்கலாம். ஓட்மீலில் நார்ச்சத்து மற்றும் கால்சியம் இரண்டும் உள்ளன, இது பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியத்தை காக்கும். முட்டையை அவித்தோ அல்லது ஆம்லெட் போட்டோ கொடுக்கலாம் .மேலும் பன்னீர் குழந்தைகளுக்கு ஏற்ற அதிக சத்துள்ள உணவுகளில் ஒன்று .அதை கொடுத்தல் அவர்கள் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்று .