நாப்பது வயசானவங்க இதை ஒதுக்கினால் மீதி 60 வருஷம் ஆரோக்கியமா வாழலாம்

 
heart

பொதுவாக நாப்பது வயது வரை நாம் சொல்வதை உடல் கேட்கும் .ஆனால் நாற்பதுக்கு பிறகு உடல் சொல்வதை நாம் கேட்க வேண்டும் .அதாவது உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கி வாழ்ந்தால் மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாய் வாழலாம் .ஆனால் பலர் வயதை பற்றி கவலைப்படாமல் இஷ்டத்திற்கு மனம் விரும்புவதையெல்லாம் உண்பதால் பல ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர் .அதனால் 40 வயதுக்கு பிறகு நாம் பின்வரும் உணவு வகைகளை ஒதுக்கி வந்தால் மேலும் 60 ஆண்டுகள் மருத்துவரிடம் செல்லாமல் வாழலாம்

1.சிலர் பல குளிர் பானங்களுக்கு அடிமையாகியிருப்பர் ,அந்த சர்க்கரை சேர்த்த குளிர் பானங்கள் மோசமானவை. 40 வயது கடந்த பிறகும் இந்த பானங்கள் குடிப்பது நல்லது கிடையாது.

cool drinks

2சிலர் பாப்கார்னை எந்நேரமும் சாப்பிடுவர் .அந்த பாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில், ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை. இதை ஒதுக்கி வைக்கணும்

3.சிலர் சோயா சாஸை அடிக்கடி சாப்பிடுவதுண்டு ,இந்த சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு தேக்கரண்டி சோயா சாஸில் 879 மில்லிகிராம் சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

4.சிலர் சிப்ஸ் இல்லாமல் சாப்பிடவே மாட்டார்கள் ,இந்த  ஃப்ரைஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சரும வயதிற்கு வழிவகுத்து நம் ஆரோக்கியத்தை சிதைக்கும் .