உங்க குழந்தைக்கு காய்ச்சல் கண்டதும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடாம, சில வீட்டு வைத்தியம் செஞ்சி பாருங்க

 
fever fever

நேருக்கு நேர் மோதி கோர விபத்து..‌ பலியான ஆட்டோ ஓட்டுனர்.. தேவதானப்பட்டியில் சோகம்!
பருவ கால மாற்றங்களால் நம்முடைய உடலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக குளிர்காலம் தொடங்கிவிட்டால் திடீர் திடீரென்று காய்ச்சல வரும், சனி பிடிக்கும். பகலில் இதுபோன்ற பிரச்சினை வரும்போது உடனே மருத்துவரை அணுக முடியும். ஆனா்ல இரவு நேரத்தில் திடீரென்று காய்ச்சல் வந்துவிட்டால், என்ன செய்வீர்கள். 

வெப்பநிலையில் லேசான சரிவு மற்றும் குளிர்ந்த காற்று ஆகிய இரண்டுமே குளிர்காலம் வருவதற்கான ஒரு அறிகுறி. இந்த காலத்தில் நாம் உடலின் மீது அடர்த்தியான ஆடை உடுத்தி கொள்வது நல்லது. ஆனால் இந்த மாற்றம் காலம் பெரும்பாலும் சளி மற்றும் காய்ச்சலை பரப்பும். பருவ கால மாற்றங்களால் நம்முடைய உடலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக குளிர்காலம் தொடங்கிவிட்டால் திடீர் திடீரென்று காய்ச்சல வரும், சனி பிடிக்கும். பகலில் இதுபோன்ற பிரச்சினை வரும்போது உடனே மருத்துவரை அணுக முடியும். ஆனா்ல இரவு நேரத்தில் திடீரென்று காய்ச்சல் வந்துவிட்டால், என்ன செய்வீர்கள். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் பாட்டில் இந்த 5 சிம்பிளான வழிமுறைகளை தான் செய்வார். காய்ச்சல் பறந்துவிடும்.

மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் தலைவலி போன்ற சளியின் பொதுவான அறிகுறிகள் நம்மை நிம்மதியக இருக்க விடாது. சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க மிகவும் பரிந்துரைக்கும் வழி மருந்துகளை உட்கொள்வது தான். ஆனால், கடுமையான சளி மற்றும் காய்ச்சலிலிருந்து விடுபட சில இயற்கையான அசாதாரண வழிகள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வர காரணம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் சளி அல்லது பிற வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று அர்த்தம்.

குழந்தைக்கு காய்ச்சல் வர பிற காரணங்கள், தடுப்பூசி செலுத்தியதனால், குழந்தைகளை வெய்யிலில் அதிக நேரம் வைத்திருப்பதால் அல்லது மிகவும் இறுக்கமான, சூடான ஆடையை அணிவதால் கூட காய்ச்சல் வர கூடும்.

ஒரு குழந்தையின் சாதாரண வெப்பநிலை சுமார் 97 முதல் 100.3 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வெப்பநிலை 100.4 F அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதைக் காய்ச்சலாகக் கருதப்படுகிறது.

காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்

உங்கள் குழந்தை எப்போதும் போல சாதாரணமாக இருந்தால் காய்ச்சலை பற்றி கவலை பட தேவையில்லை. ஆனால் குழந்தையின் செயலில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

குழந்தை சாதாரணமாக இருந்து காய்ச்சல் அதிகமாக இருந்தால் வீட்டிலேயே நமது பாட்டி வைத்தியத்தின் மூலம் சரி செய்துவிடலாம். காய்ச்சல் குணமாக பாட்டி வைத்திய குறிப்புகளை கீழே பார்க்கலாம்.

குழந்தை தூங்கும் போது, ​​ஈரமான துணியை குழந்தையின் நெற்றியில் வைக்கவும். இது அதிக காய்ச்சலை குறைக்க உதவும் பாட்டி வைத்தியமாகும். இப்படி செய்வதன் மூலம் குழந்தையின் உடல் சூடு குறைகிறது.

காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு அடர்த்தியான உடைகளை உபயோகிக்க கூடாது. மிகவும் லேசான காட்டன் துணிகளை பயன்படுத்த வேண்டும்.

வெங்காயம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்தும் சிறந்த பாட்டி வைத்தியமாகும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, குழந்தையின் காலின் பாதத்தில் தேய்த்தால் காய்ச்சல் குறையும்.

குழந்தையை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வைக்க வேண்டும்.

காய்ச்சலின் போது நீரிழப்பு ஏற்படும். அதை தவிர்க்க அதிக திரவ உணவுகளை கொடுக்க வேண்டும்.

குழந்தையின் வயதை பொறுத்து தாய்ப்பால், இளநீர், ஜூஸ் அல்லது தண்ணீர் போதுமான அளவு கொடுக்க வேண்டும்.