உங்க பெட் ரூமிலிருக்கும் இந்த பொருட்களால் புற்று நோய் உங்க வீட்டு கதவை தட்டும்

 
breast cancer

நமது ஆரோக்கியத்தை நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் தான் நிர்ணயிக்கிறது.

அந்த வகையில், நாம் படுக்கை அறையில் பயன்படுத்த கூடிய பல வித பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்துமாம்.

pc

தலையணை உறை

இன்று நாம் பயன்படுத்தும் தலையணை உறையானது முழுக்க முழுக்க வேதி பொருட்கள் நிறைந்த பஞ்சினால் தயாரிக்கின்றனர்.எனவே, தலையணை வாங்கும் போது, இயற்கை முறையில் உற்பத்தி செய்த காட்டன் பஞ்சினால் தயாரித்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள்

படுக்கை அறையில் நீங்கள் வைத்துள்ள அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் நீங்கள் எடுத்து விட வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொம்மைகள், கவர்கள், பரிசுகள். ஏனெனில், இவற்றில் formaldehyde என்ற மோசமான வேதி பொருட்கள் கலக்கப்படுகின்றன.

எனவே, இவை படுக்கை அறை வெப்பம் அடையும் போது இந்த பிளாஸ்டிகுகள் வேதி வினை புரிந்து நம் உடலில் ஒட்டி கொண்டு புற்றுநோயை தரும்.

கலர் கலர் பெயிண்டுகள்

வீட்டிற்கு கலர் கலராக பெயிண்ட் அடிக்க விரும்பி, பல பக்க விளைவுகளை நீங்களே பெற்று கொள்ளாதீர்கள். அதிக வேதி தன்மை அற்ற பெயிண்ட்கள் உடலுக்கு விளைவை தராது. குறிப்பாக படுக்கை அறையில் மிகவும் மென்மையான நிறத்தையே அடிக்க வேண்டும். இல்லையெனில் சுவாச பிரச்சினை, புற்றுநோய் அறிகுறிகள் ஏற்படலாம்.

ஸ்மார்ட் போன்

இன்று நம்மில் பலரும் குழந்தையை போல நம் கைப்பேசியை பக்கத்தில் வைத்து கொண்டே தூங்குவோம். ஆனால், இதில் தான் நமக்கு எமன் இருக்கின்றான் என்பது நாம் அறிந்திராத உண்மை. ஆம், புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இவற்றில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ரூம் ஸ்பிரே

நல்ல நறுமணமான வாசனை வர வேண்டும் என்பதற்காக கண்ட ரூம் ஸ்பிரேயர்ஸ்களை பயன்படுத்தினால் அதன் பின்விளைவு எத்தகைய மோசமானது என உணருங்கள். புற்றுநோய் உண்டாக்க கூடிய தன்னை இந்த ரூம் ஸ்பிரேயர்ஸ்களிலும் உள்ளதாம். எனவே, இதனை முடிந்தளவு தவிர்க்கலாம்.

  • சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். புற்றுநோய்க்கு நெல்லிக்காய் மற்றும் துளசி அற்புத மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது நுண்கிருமிகளை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
  • துளசியை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒருபிடி அளவு வில்வ இலை, ஒருபிடி துளசி, சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி வாரம் ஒருமுறை இந்த தேனீரை குடித்துவர புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.