இந்த வெயில் காலத்தில் டாக்டர் வீட்டில் டோக்கன் வாங்காமலிருக்க இந்த உணவுக்கெல்லாம் டாட்டா சொல்லுங்க

 
food

உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும். இது போன்ற நேரத்தில் வாய்ப்புண், வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது.

இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் தர்பூசணி, கிருணிப் பழ ஜூஸ் என்று படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள், கோடையில் உடலுக்கு நலம் தரும் உணவுகள் பற்றி இங்கே காண்போம்.

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்
நீர் நிறைந்த குளிர்ச்சியான காய்கறி வெள்ளரி. கோடைக் காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும் சிறந்த காய்கறி.

குறைந்த கலோரி கொண்ட வெள்ளரியை கோடையில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் தண்ணீர் சத்து பாதுகாக்கப்படும். உடல் எடையும் குறையும்.

எலுமிச்சை ஜூஸ்
கோடையில் பலரும் விரும்புவது சில் என்ற எலுமிச்சை ஜூஸ்தான். வெயிலில் கலைத்து வருபவர்களுக்கு எலுமிச்சை ஜூஸில் உள்ள சர்க்கரை சத்து உடனடி ஆற்றல் அளிக்கும். எலுமிச்சை புத்துணர்வு அளிக்கிறது.

உடலை குளிர்விப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது எலுமிச்சை ஜூஸ். உச்சி வெயிலில் அலைந்துவிட்டு அதிக சில் என்று ஜூஸ் அருந்த வேண்டாம்.

sun

வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது.

வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை,கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.

உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான்; ஆனால், அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகமுள்ளது; எனவே, இதனை கோடை காலத்தில் அளவாக சாப்பிட வேண்டும்.