இந்த கஷாயத்தை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமனை விரைவாக குறைக்கலாம்.
பொதுவாக இன்றைய சூழலில் பெரும்பாலானோருக்கு தொப்பை பெரும் சவாலாக உள்ளது .இந்த தொப்பையை குறைக்க பலர் வாக்கிங் செல்கின்றனர் .சிலர் உணவுக்கட்டுப்பாடு இருந்தும் இந்த தொப்பையை குறைக்க முடியாமல் அவஸ்த்தை படுகின்றனர் ,இன்று நாம் இயற்கையான முறையில் எப்படி தொப்பையை கரைக்கலாம் என்று பார்க்கலாம்
1.தொப்பையை குறைக்க முதலில் எலுமிச்சம்பழங்களில் இருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
2.பின்னர் மீதமிருக்கும் லெமன் தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு விடவும்.
3.அதன் பிறகு அத்துடன் அரை டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் கொஞ்சம் இஞ்சி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
4.பின் அந்த கலவையை வடிகட்டி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் பருமனை மிக விரைவாக குறைக்கலாம்.
5.அடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் 3 டீஸ்பூன் சீரகம் மற்றும் 3 இன்ச் இலவங்கப்பட்டையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து பின் வடிகட்டவும்.
6.இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடித்தால் 10 நாட்களில் தொப்பை குறைவதை உணரலாம்.
7.அடுத்து 2 டீஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
8.பிறகு அந்த விதையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து,கொள்ளவும்
9.பின்னர் அந்த கலவையில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
10.இந்த கஷாயத்தை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமனை விரைவாக குறைக்கலாம்.


