பெண்கள் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் நேரும் அதிசயம்

 
grapes grapes

பொதுவாக திராட்சை பழம் நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை வாரி வழங்குகிறது .அதிலும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது ,அந்த வகையில் ஊறவைத்த உலர் திராட்சையில் அடங்கியுள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1.உலர் திராட்சை தோல் சுருக்கம், முதுமை தோற்றம் போன்றவற்றை நீக்கி இளமையை தக்க வைத்து கொள்ள பெரிதும் உதவுகிறது .
2.சிலர் உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்., அவர்கள் ஒரு லிட்டர் நீரில் 15-20 உலர் திராட்சை சேர்த்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைக்க வேண்டும். 
3.இந்தஉலர் திராட்சை நீரை நாள் முழுவதும் குடித்து, திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
4. பெண்கள் ஊறவைத்த உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
5.உலர் திராட்சையில் விட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களை தந்து பார்வை குறைபாட்டை நீக்கும் . 
6. கண்ணாடி அணிந்திருப்பவர்கள் ஊறவைத்த உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வை குறைபாடு நீங்கி, பார்வை திறன் மேம்படும்.
7.உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். 8.தினமும் பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் அப்போது உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.
9.மேலும் ஊறவைத்த உலர் திராட்சையில்  சுக்ரோஸ், ப்ரெக்டொஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம், அடங்கியுள்ளது 
10.ஊறவைத்த உலர் திராட்சையில் இரும்புசத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துக்களும் அடங்கி  உள்ளது.