தைராய்டு இருக்கா இல்லையான்னு வீட்லே டெஸ்ட் செய்யலாம் வாங்க
பொதுவாக இன்று பெண்களிடையே காணப்படும் பொதுவான ஒரு நோய் எதுவென்றால் அது தைராய்டு கோளாறுதான் ,இந்த கோளாறை நாம் நம் வீட்டிலிருந்த படியே கண்டு பிடிக்க சில சோதனைகள் உண்டு
பொதுவாக, தைராய்டு நோயை அடையாளம் காண இந்த கழுத்து சோதனை, மிகவும் துல்லியமானது .
1.உங்கள் கழுத்தை நீங்கள் முழுவதும் காணும் வகையில் கண்ணாடியின் முன் நிற்கவும்.
2.உங்கள் கழுத்தில் ஏதேனும் தாவணி, டை, நகைகள் போன்ற ஏதாவது இருந்தால் அகற்றிவிடுங்கள்.
3.உங்கள் தாடை மேல்நோக்கி இருக்குமாறு, உங்கள் கழுத்தை மெதுவாக உயர்த்தவும்.
4.உங்கள் கழுத்தை மேலே உயர்த்தியவாறே ஒரு சிப் தண்ணீரை குடியுங்கள் . இதனால் உங்கள் குரல்வளை முன்னோக்கி நகரும்.
5.இது உங்கள் தைராய்டு சுரப்பியின் வடிவத்தை தெளிவாக காண அனுமதிக்கும், ஏதேனும் வித்தியாசம் இருந்தால் காட்டும்.
6.நீங்கள் தண்ணீரை விழுங்கும்போது ஏதேனும் தடிப்புகள், கட்டிகள், புரோட்ரஷன்கள் போன்று ஏதேனும் கழுத்தின் மையத்தை விட்டு விலகி தெரிகிறதா என்று பாருங்கள்.
7.இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்து பார்த்தால் அதாவது, மற்றொரு வாய் தண்ணீரை விழுங்கி, உங்கள் கழுத்தில் உள்ள கட்டமைப்புகளை சில முறை உன்னிப்பாக கவனியுங்கள்.
8. உங்கள் விரல் வைத்து பார்த்தால் இந்த தைராய்டு முடிச்சு உருண்டு வருவதை உணர முடியும் அல்லது நீங்கள் தண்ணீர் குடிக்கும் போது அது நகர்வதைக் காணலாம்.
9. உங்கள் தைராய்டு சுரப்பியைச் சுற்றியுள்ள பகுதியை மெதுவாகத் தொட்டு பார்த்து,ஏதேனும் விரிவாக்கம், புடைப்புகள் இருக்கிறதா என பாருங்கள்.
10.உங்கள் கழுத்தின் நடுப்பகுதியில் உங்கள் விரலை வைத்து கீழ் நோக்கி இறக்கவும்.
11.இதற்கு கீழே உள்ள இரண்டு பகுதிகள் தைராய்டு இஸ்த்மஸ் (இரண்டு மடல்களையும் இணைக்கும் திசு) ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் தைராய்டு சுரப்பிகள் உள்ளன.


