வெறும் வயிற்றில் 5 துளசி இலைகளை மென்றால் எந்த நோயை வென்று காமிக்கலாம் தெரியுமா ?

 
tulsi tulsi

இன்றைய காலத்தில் பலர் அசிடிட்டி பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்..

thulasi

பெரும்பாலும் பித்த பாதிப்பு இருப்பவர்களுக்கே இந்த அசிடிட்டி பிரச்சினை பாடாய் படுத்தி எடுக்கும் .அதனால் அவர்கள் உணவு விஷயத்தில் நிறைய கட்டுப்பாடு ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்  உதாரணமாக ஊறுகாய், தக்காளி கலந்த உணவுகள், தயிர், மிளகாய், பூண்டு, சாக்லேட் வகைகள், வறுத்த உணவுகள் போன்றவற்றை சும்மா கிடைத்தாலும் சாப்பிட கூடாது மேலும் . மது அருந்துவதும் மற்றும் மனஅழுத்தத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டால் இந்த பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

செய்யவேண்டியவை

அமிலத்தன்மை பாதிப்பின்போது,  பசி ஏற்படவில்லை என்றாலும், தேவையான அளவு ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ருசிக்கு சாப்பிடுவது மட்டுமன்றி, பசிக்கு சாப்பிட வேண்டும். உணவு ருசிகளில்,பல சுவை உணவிகளை சேர்க்க வேண்டும் . இனிப்பு கசப்பு துவர்ப்பு முதலியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி போன்ற உள்ள அமைதிக்கு வழி செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை பழக்கப்படுத்திக்கொண்டால் இந்த பாதிப்பிலிருந்து மருந்து மாத்திரை  இல்லாமல் குணப்படுத்தி கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்

இதற்கு உடனடி நிவாரணமாக இரண்டு ஏலக்காயை எடுத்து நசுக்கி அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க, அசிடிட்டிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.   அன்றாடம் 5துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இந்த பாதிப்பிலிருந்து சீக்கிரம் வெளியே வரலாம் என்று சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்