தூதுவளையை துவையல் செய்து சாப்பிட்டால் அது துவைத்து எடுக்கும் நோய்கள்

 
thoothuvalai

தூதுவளை இந்தியாவின் பல பகுதிகளில் வளரும் ஒரு மருத்துவ குணமுள்ள ஒரு செடியாகும் . இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.இதில் கால்சியம் சத்த்துகள் நிறைந்து காணப்படுவதால் இதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் குணமாகும் .மேலும் இரைப்பு மற்றும் சளி தொல்லைக்கு சிறந்த மருந்து ஆகும்

தூதுவளையின் மருத்துவ பயன்கள் ...

சிலருக்கு உடல் அதிகம் குளிர்ச்சியடைவதால் ஜலதோஷம் ஏற்பட்டு இருமல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்பட்டு தொல்லை கொடுக்கும் .அந்த நபர்கள் . தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்

தற்காலங்களில் பலருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவஸ்த்தை கொடுக்கும் .அந்த நபர்கள் இந்த இலையை ஒரு மண்டலம் சாப்பிட்டால் போதும் அந்த நோய் பறந்து போய் விடும் 

தீராத ஜுரம் ,கொதிக்கும் காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தை படுவோர் தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், ஜுரம், காய்ச்சல், போன்றவை குணமாகி ஆரோக்கியம் மேம்படும்