சர்க்கரை நோயை விரட்டும் தினை அரிசியில் ஒளிந்துள்ள மற்ற ஆரோக்கிய ரகசியம்
தினை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’, ‘ஜெர்மன் மில்லட்’, ‘ஹங்கேரியன் மில்லட்’ என்று பல வகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ (Fox Tail Millet) என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் ஆங்கிலேயர்கள் அந்த பெயரை வைத்துவிட்டார்கள்.
தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் தினை அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது
1. அதிக அளவு நார்ச்சத்து
தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.

2.உடல் எடை குறைக்க உதவும்
தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும். எனவே நீங்கள் அரிசிக்கு பதிலாக தினை அரிசி உண்டு வரவும்.
தொப்பையினை குறைக்க
3.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்
தினை அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் உடையது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் சர்க்கரை உறிஞ்சுவது தாமதமாக ஏற்படும். தினமும் இதனை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.
4. புரத சத்து நிறைந்தது
தினை அரிசியில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்ச்சி சீராக அமையும். மேலும் உங்களின் முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
5. பீட்டா கரோட்டின் நிறைந்தது
தினை அரிசியின் பொன்னிறம் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் உங்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகுக்கும். எனவே தினை அரிசியினை தினமும் உண்டு வாருங்கள் நண்பர்களே.
6. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது
தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்க;லாய் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். எனவே எப்பொழுதும் இளமையுடன் இருக்க தினமும் தினை அரிசி உட்கொள்ளுங்கள்.
7. வலிமையான எலும்புகள்
கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.
இவ்வளவு நன்மைகள் தினை அரிசி போன்ற சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளதால் அரிசி போன்ற தானியங்களை தவிர்த்து சிறுதானியங்களை உண்டு வாருங்கள் உறவுகளே.


