இந்த பொருட்களை பயன்படுத்துவது ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும்
பொதுவாக இப்போதெல்லாம் உணவுகளில் ,ரசாயனம் அதிகம் கலந்து விட்டதால் அது ஆண்களின் உடலை மட்டும் பாதிக்கவில்லை ,அவர்களின் விந்தனுக்களின் தரத்தையும் பாதிக்கின்றது ,மேலும் இந்த பிரச்சினையை எப்படி சரிசெய்யலாம் எந்த உணவுளை எடுத்து கொள்ளலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. கடந்த 45 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 51 சதவிகிதம் குறைவடைந்து விட்டது.
2.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், ரசாயனங்களின் பயன்பாடும் இதற்கு முக்கியமான காரணம் ,
3.அதனால் சரியான அளவில் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே மலட்டுத்தன்மை வராமல் காக்கலாம் .இதற்கு பின்வரும் உணவு முறையை பின் பற்றலாம்
4.ஆண்களின் மலட்டு தன்மையை போக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது
5.ஆண்களின் மலட்டு தன்மையை போக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன்களை உணவாக உட்கொள்ளலாம்.
6.ஆண்களின் மலட்டு தன்மையை போக்க கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகள் எடுத்து கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
7. கோழி இறைச்சி, பூசணிக்காய் விதைகள், பசலைக்கீரை போன்றவற்றில் Zinc அதிகம் இருப்பதால் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது பலனை தரும்.
8.ஆண்களின் மலட்டு தன்மையை போக்க ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் உள்ள பெர்ரி, நட்ஸ், கொய்யா, வாழைப்பழம், அவகோடா மற்றும் சிட்ரஸ் அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றையும் எடுத்துக்கொள்வது பலனை தரலாம்.
9.மறந்தும்கூட பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்,
10.பதப்படுத்தப்பட்ட இறைச்சி அடிக்கடி உட்கொள்வதை தவிர்க்கவும்.
11.புகைப்பிடிப்பதும், பான், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதும் மலட்டுத்தன்மையை அதிகரிக்கலாம், எனவே இந்த பழக்கத்தை தவிர்க்கலாம்

