ரத்த அழுத்தம் முதல் இதய நோய் வரை துரத்தும் இந்த டீ .

 
green tea health tips

துளசி பல மருத்துவ குணமுள்ள மூலிகையாகும் .இது பல  நோய்கள் வராமல் தடுப்பதில் முன்னிலை வகிக்கிறது .இந்த துளசியை தேநீராக பருகி வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் .

thulasi

இந்த துளசி டீ யை குடித்தால் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்களில் இருந்து முழு நிவாரணம் பெறலாம் .

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த துளசி டீ யை குடித்தால்  எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. துளசி குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள அழுக்கு யாவும் அழிந்து சுத்தமாகும்.

 சரி வாங்க துளசி டீ செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:- காய்ந்த துளசி - 2 ஸ்பூன் வெந்நீர் - தேவையான அளவு புதினா - சிறிதளவு எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் செய்முறை:- முதலில் செடியில் இருந்து துளசியை பறித்து நன்கு வெயிலில் காய வைத்து கொள்ளவும். இலை நன்றாக சுருங்கும் வரும் வரை வெயிலில் வைக்கவும். அடுப்பில் தேவையான அளவு நீர் வைத்து ஒரு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் வேளையில் காய்ந்த துளசி, புதினா ஆகியவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் நீரை மட்டும் வடிகட்டி கொண்ட பின்னர்  எலுமிச்சை சாறை சேர்த்தால் துளசி டீ தயார்.இனி கண்ட தேநீரை குடித்து பித்தத்தை அதிகப்படுத்தி கொள்வதைவிட இந்த துளசி டீ யை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள் .