ஆபத்தை உண்டாக்கும் அல்சருக்கான அறிகுறிகள்

 
stomach

இன்று வாலிபர் முதல் வயோதிகர் வரை சந்திக்கும் ஒரு பிரச்சினை எதுவென்றால் அது அல்சர்தான் .இந்த அல்சர் என்கிற வயிற்று புண் பரம்பரை வியாதி என்று பலர் நினைக்கின்றனர் .ஆனால் அது தவறு ,நேரத்திற்கு சாப்பிடாமலும் ,அதிக மசாலா காரமான உணவுவகைகளை சாப்பிடுவதிலும் இந்த அல்சர் தோன்றுகிறது .நாம் சாப்பிடும் உணவு பயணம் செய்யும் உணவு குழாய் மற்றும் சிறுகுடல் இரைப்பை என்று எங்கு வேண்டுமானாலும் இந்த புண் உண்டாகும் .மேலும் இதற்கு சிலவகை பாக்டீரியா காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது .இந்த அல்சர் நம் வயிற்றில் அமிலம் சுரக்கும் காலை மதியம் ,மாலை வேலையில் வலி அதிகம் வரும் ,சில நாள் நீடித்து விட்டு சில வாரம் கழித்து மீண்டும் வரலாம் ,இந்த அல்சருக்கான அறிகுறி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ulcer

 

1.சிலருக்கு பசி நேரத்தில் அமிலம் சுரப்பதால் வலி உண்டாகும் .பெப்டிக் அல்சர் இருப்பவர் களுக்கு, வயிறு பற்றி எரிவது போன்ற உணர்வு இருக்கும்.

2. அல்சர் புண் உள்ளோருக்கு வலி வரும் .புண் உள்ள  இடத்தில் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் படும்போது தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.

3.இந்த வலி, நோயாளியின் தொப்புள் முதல் மார்பு எலும்பு வரை எந்தப் பகுதியில் வேண்டு மானாலும் ஏற்படலாம்.

4.சிலர் எதுவும் சாப்பிடாமல், வெறும் வயிறாக இருப்பர் ,இந்த காலி வயிறு  நேரத்தில் வலி இன்னும் அதிகம் ஆகும்.

5.இரவில் வயிறு காலியாக இருப்பதால் வலி மேலும் அதிகரிக்கும்.

6.அதன் பின் தானாக சரியாகி விடும் .பின்னர் சில நாட்களோ, சில வாரங்களோ வலி மறைந்து பிறகு மீண்டும் வெளிப்படும்