இந்த அறிகுறியிருந்தா உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்குனு அர்த்தம்

 
bp

ஒரு மனிதனின் உயிரை கொல்லும் நோய்களில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று .இது அதிகமானால் நமக்கு இதய நோய் முதல் பக்கவாதம் வரை உண்டாக வாய்ப்புண்டு .எனவே எப்போதும் நம் ரத்த அழுத்தத்தை நார்மலாக வைத்திருக்க பின் வரும் வழிகளை கடை பிடிக்கலாம் .தினம் ஒரு அரை மணி நேரம் வாக்கிங் போவது மிக நல்லது .டீ காப்பிக்கு பதில் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம் .மேலும் இதன் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்

bp

1.உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடலில் உள்ள  இரத்த நாளங்கள் சேதமடைந்திருக்கும் .இதனால்  கால் மற்றும் கால்களை உள்ளடக்கிய பகுதிகளில் சில அறிகுறிகள் தோன்றும் . 

2.உயர் இரத்த அழுத்தம் உடலின் கீழ் பகுதியில் உள்ள தமனிகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தி பெரும் பாதிப்பையுண்டு பண்ணுகிறது

3.இந்த உயர் ரத்த அழுத்தம் கால் பகுதிகளில் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

4.இந்த உயர் ரத்த அழுத்தத்தால் புற தமனி நோய் பாதிப்பு ஏற்பட்டு  தமனிகள் கைகள் அல்லது கால்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து நமக்கு பாதிப்பை தருகிறது . 

5.இந்த உயர் ரத்த அழுத்தம் காரணமாக கால்களுக்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது கால் வலி ஏற்படக்கூடும். 

6.இந்த உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிவப்பு அல்லது நீல கால்விரல்கள், கால்களில் கூச்ச உணர்வு, மற்றும் கால்களில் எதிர்பாராத முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது .