ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தான அறிகுறிகள் -அலட்சியப்படுத்தாதிங்க.

 
Heart attack

நம் உடலின் பல பகுதிகளுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்புவதுதான் இதயத்தின் வேலையாகும் .இந்த இதயத்தை நாம் நலமுடன் கவனித்து கொள்ள வேண்டும் .ஆனால் பலர் இந்த இதயத்துக்கு பாதிப்பு உண்டாகும் உணவு வகைகளை தொடர்ந்து எடுத்து கொள்வதால் இதய நாளங்களில் கொழுப்பு ஏற்பட்டு இதயத்தில் அடைப்பு உண்டாகி இதய அடைப்பு நோய் உண்டாகி பலரின் உயிரை இளம் வயதிலேயே பறித்து விடுகிறது .இந்த இதய அடைப்பு நோயின் அறிகுறி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

heart

1.. மார்பு வலி, அதிகப்படியான மூச்சுத் திணறல் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிக்கு முரணான வியர்வை போன்றவை நாம் புறக்கணிக்க கூடாத மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஆகும்.

2.சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போது அதிக இதயத் துடிப்பு, தலைச்சுற்றல், மார்பின் நடுப் பகுதியில் உள்ள தசைகளில் அசௌகரியம் உண்டாகி பாடாய் படுத்தலாம் .இதுவும் ஹார்ட் அட்டாக் அறிகுறிதான் .

3.சிலருக்கு வியர்வையுடன் இடது அல்லது வலது கை வலியும் வரலாம். இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடற்பயிற்சி செய்வதை  நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுனால் உயிர் பிழைக்க முடியும் .

4.எக்சசைஸ் அல்லது வாக்கிங் போது சோர்வு, மூச்சுத் திணறல், தாடை, கழுத்து அல்லது மேல் முதுகில் வலி, கீழ் மார்பில் அழுத்தம் போன்றவை உடற்பயிற்சி செய்வதால் ஏற்படுகிறது என மக்கள் நினைத்துக் கொள்வதால் அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால் இவை மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாகவும் இருக்கலாம் எனவே இதை அலட்சிய படுத்த வேண்டாம் எண்று டாக்ட்டர்கள் கூறுகின்றனர்