இந்த ஐந்து அறிகுறியை அலட்சியப்படுத்தினா ஆயுசுக்கும் மாத்திரை சாப்பிடவேணும்

 
sugar

பொதுவாக இன்று உலகையே அச்சுறுத்தி வரும் நோய்களில் மிக முக்கியமானது சர்க்கரை நோய் .இந்த நோயால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா .அதுவும் நம் தமிழகத்தில் அதிகம் பேரை இந்த நோய் பாதிக்கின்றது .இந்த நோய் வந்துவிட்டது என்று அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

sugar

1.உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, உங்கள் சிறுநீரகங்கள் அதை அகற்ற  முயற்சிக்கும் போது ,நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும் .

2. அதனால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு  அதிக தாகம் எடுக்கிறது , அப்படி தாகம் எடுக்கும் போது அதிகமாக தண்ணீர் குடித்து , அதிகமாக சிறுநீர் கழிகின்றனர்

3.சுகர் பேஷண்டுகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது உடலில் உள்ள நீரின் அளவைக் குறைக்கும், அதாவது நீங்கள் நீரிழப்புக்கு ஆளாவதால் , சுகர் பேஷண்டுகளுக்கு தலைவலி உண்டாகிறது .

4., நீங்கள் இயல்பை விட மிகவும் சோர்வாக உணர்ந்தால்  அது உயர் இரத்த சர்க்கரை காரணமாக இருக்கலாம்.

5.மேலும் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், அது கண்களை பாதிக்கும்.

6.இந்த சக்கரை நோயாளியின் அதிக சுகர்  , கண்களின் நடுவில் உள்ள லென்ஸில் சிக்கி விடுகிறது , இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு பார்வை தெளிவில்லாமல் இருக்கிறது