கட்டுக்குள் வராத சுகர் அளவை சட்டுன்னு குறைக்க உதவும் டயட்

 
sugar

சிலர் என்னதான் மாத்திரை எடுத்துக்கொண்டாலும் டயட் விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமலிருப்பார்கள் .அதனால் சுகர் அளவு கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் .அவர்களுக்கு சில உணவு கட்டுப்பாடுகளை டயட்டிஷியன் மூலம் தெரிவித்துள்ளோம் 
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தற்போது வரிசையாக பார்க்கலாம்.

sugar

முழு தானியங்கள்

சுகர் பேஷண்டுகளின் ஆரோக்கியமான சுகர் அளவை ஓட்ஸ், பார்லி, குயினோவா போன்ற முழு தானியங்கள் கொடுக்கும் என்று சுகாதார வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர் 

சியா விதைகள்

சியா  விதைகளில் சுகர் அளவை குறைக்க உதவும் சில வகை பொருட்கள் உள்ளதால் சுகர் பேஷண்டுகளுக்கு உதவி கரமாக இருக்கும் .இந்த சியா விதைகளில்  நார்ச்சத்து அதிகமாகவும், ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வரவைக்க  உதவுகிறது . 

பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களை அதிக அளவில் உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கபலமாக இருக்கும் 

காய்கறிகள்
சுகர் அளவு எவ்ளோ இருந்தாலும் கவலை பட கூடாது ,கவலை இன்னும் அதிகப்படுத்தும் .அதற்குத்தான் பாகற்காய், கத்தரிக்காய், பூசணி, தக்காளி, பச்சை பீன்ஸ், கேரட், வண்ணமயமான மிளகுத்தூள், கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் மற்றும்  கீரைகளை அதிகம் சாப்பிட்டு சுகர் அளவை குறைத்து கொள்ளுங்கள் 

பூண்டு

நாம் சமையலில் சேர்க்கும் பூண்டில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தச் சர்க்கரை, வீக்கம், எல்டிஎல் கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க  உதவும் ஒரு வகையான மூலப்பொருள் உள்ளது 

கொத்தமல்லி விதைகள்

கொத்தமல்லி விதைகளிள்  பல மருத்துவ குணம் அடங்கியுள்ளது .அதில் உள்ள சில பொருள் சுகர் பேஷன்டின் குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது.  மேலும் இது  குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நோயாளியின்  சிறுநீரகத்தையும் பாதுகாக்கிறது 

பாகற்காய்  சாறு

பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சுகர் அளவு உயராமல் பாதுகாக்கிறது .தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிப்பது மிகவும் நல்லது