மொபைலை இத்தனை மணி நேரம் பாக்குறவங்களுக்கு ,பக்கவாதம் தாக்குமாம்

 
2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை – முழு விபரம் உள்ளே?!..

மொபைலை இத்தனை மணி நேரம் பாக்குறவங்களுக்கு ,பக்கவாதம் தாக்குமாம்  

உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய்களின் ஒன்றாக இருக்கிறது பக்கவாதம். மாரடைப்புக்கு அடுத்தபடியாக உயிரை பறிக்கக்கூடிய நோயாக பக்கவாதம் இருப்பதால், இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது

ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, ரத்தவோட்டம் குறைவதால் மூளையின் பாகங்கள் செயல் இழப்பதை பொதுவாக பக்கவாதம் என்கிறார்கள். மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் கசிவு ஏற்படுவதாலும் பக்கவாதம் ஏற்படுகிறது.

அதாவது, பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். மூளைக்குப் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது Ischemic stroke என்று அழைக்கப்படுகிறது.   ரத்தக் கொதிப்பினால் மூளைக்குப் போகும் ரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதை Hemorrahagic Stroke என்று அழைக்கின்றனர்.

இன்று இளம் வயதினருக்கும் பக்கவாதம் ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பது தெரிந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது

மாறிவரும் காலங்களில், ஒவ்வொருவரின் அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது மொபைல். இது அனைவரின் பாக்கெட்டிலும் வாழ்கிறது. மொபைல் திரையில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் ஏற்படும் வாய்ப்பும், ஆயுட்காலம் குறைவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன.

மொபைலைப் பயன்படுத்தும் நேரம்டிஜிட்டல் ஸ்கிரீன் டைம் என்று அழைப்பார்கள், அது மூளை பக்கவாதம் போன்ற ஆபத்தான நோயை உண்டாக்கும். மொபைலால் ஏற்படும் பக்கவாதத்திற்கான ஆபத்தை எப்படி குறைக்கலாம்?

பல மணி நேரங்களுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துவதால் இயங்குவதால் பக்கவாதம் வரலாம் என்று ஜேபீ மருத்துவமனையின் (Jaypee Hospital) நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மணீஷ் குப்தா கூறுகிறார். எந்த ஒரு வேலையைச் செய்வதிலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது, அது நமது மூளையில் டோபமைன் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மொபைலைப் பயன்படுத்துவதிலும் இதுவே நடக்கும். முதலில், மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் மொபைல், காலப்போக்கில் நம்மைஅடிமையாகிவிடும்,

அது, நமக்குப் பிடித்த உணவு, குடும்பம் என பிற விஷயங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவை குறைத்துவிடும்.

தினசரி 2 மணிநேரத்தை விட அதிகமாக மொபைல் அல்லது டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 20 சதவீதம் அதிகரிக்கிறது. தற்போது இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது

 

மொபைலைப் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்திய ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இடையில் 2-5 நிமிடங்களுக்கு நடைபயிற்சி அல்லது கை கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்தால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் உருவாகும் ஆபத்து கணிசமாகக் குறையும். சர்க்கரை நோயும், உடல் எடையும் மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

அடுத்து, படுக்கையில் மொபைல் அல்லது பிற கேஜெட்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், மொபைல் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி மூளையின் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கிறது. இந்த ஹார்மோன் தூக்கத்தை குறைக்கும்.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மொபைல் அல்லது டிஜிட்டல் திரைகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் டிஜிட்டல் திரையை பயன்படுத்தக்கூடாது. இது எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

பக்கவாதம் ஏற்பட்டால், நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து உரிய சிகிச்சை கொடுத்தால் நோயாளியை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர் மனீஷ் கூறுகிறார்.

பக்கவாதம் பாதித்ததும், முதல் 6 மணி நேரம் மிகவும் முக்கியமானது. இதை கோல்டன் டைம் என்று சொல்கின்றனர். இந்த நேரத்தில் நோயாளிக்கு சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால், மூளைக்கு அதிக சேதம் ஏற்படலாம். இதில் 80 சதவீதத்தினர் வாழ்நாள் முழுவதும் முடங்கிப் போகின்றனர். இப்போது மேம்பட்ட மற்றும் புதிய இமேஜிங் தொழில்நுட்பம் காரணமாக, மூளை பக்கவாதம் பாதித்த 24 மணிநேரத்திற்குள் சிகிச்சையை சேதங்களை குறைத்துவிடலாம்.

இக்கொடிய நோயை வரவிடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு என்ன செய்யலாம்?

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்! முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய், கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.